நான் சமூகத்தை மீறியவன் தனித்துளி... தனித்துளியாய் இங்கு வந்தேன்,ஆடலோடும் பாடலோடும் விடை பெறுவதையே விரும்புகிறேன்.சுவாசிப்பதும்,வேட்டை ஆடுவதும் ,இன்பம்,துன்பம் கொள்வதும், வாழ்வதும் சாவதும் எல்லாம் இயற்கையில். இதில் மதம் என்ன செய்தது.ஆனால் இயற்கையின் தழுவல் நிறைந்திருக்க வேண்டிய மனதில் மதம் அல்லவா குடிகொண்டிருக்கிறது .இந்த முரணை விரும்பாதவன் என் கல்லறையில் எழுதுங்கள் இவன் எந்த நாட்டையும் எந்த மொழியையும் ,எந்த இனத்தையும் ,எந்த மதத்தையும் சார்ந்தவன் அல்ல .இயற்கைக்கு சொந்தகாரன், இயற்கையில் நின்று பிளவுபட விரும்பாதவன்,வெறும் ஆசை வார்த்தைகளை மட்டும் விதைக்கும் மத,இன,மொழி என  சமூகவாதிகளிடம் நின்று விலகி நிற்பவன்.என் சகல இந்திரியங்களின் உணர்வுகளையும் உணர்கிறேன்,அது இயற்கையின் உடையது.அதனால் உங்கள் உணர்வுகளையும் அறிவேன்.அதுவே எனது எழுத்துகள்.எனது எழுத்துகள் அனைத்தும் உங்கள் உணர்வுகளின் முகவரியை சார்ந்தது,அவை அனைத்தும்  உங்கள் உணர்வுகளின் பிரதிபலிப்பே.
Designed & developed by ICLC.in .